Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேன் மோதி 40வயது நபர் பலி-தஞ்சையில் பரிதாபம்

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா(40). நேற்று இவர் தஞ்சையில் நடந்த காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை பாலம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாரதிராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பாரதிராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!