Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்-அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து
அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு

வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.வைத்திலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அலுவலர்களின் பங்கு இன்றியமையாதது. பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும். ஏழை, எளிய மற்றும் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வருகை

தரும் பொதுமக்களை தொடர்ந்து கன்னியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை அலுவலர்கள் களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவுத் திறன் மற்றும் புதுமை சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். மாணாக்கர்களுக்கு நூலக பயன்பாட்டை அதிகரிக்கும் வண்ணம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுய உதவிக்குழுவினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், அவற்றை பராமரித்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து பசுமை சூழலை உருவாக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாக கருத வேண்டும். அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின்னணு நிர்வாகம் மூலம் விரைவான சேவைகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புகார் மனுக்களை இணையவழியின் மூலமாக கண்காணிக்கும் முறையை வலுப்படுத்த வேண்டும்.

அரியலூர் மாவட்டமானது சிமெண்ட் ஆலைகள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை சமநிலையில் முன்னெடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டம் சாலை விபத்தில் 5வது இடம் பெற்றுள்ளதால் சாலை பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி, சாலை பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். மேலும், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயலாற்றி அரியலூர் மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மைத் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, காவல் துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிளாலர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ. 45,780 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள்களும், 01 பயனாளிக்கு ரூ.9500 மதிப்பில் மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலியும், 01 பயனாளிக்கு ரூ.15,750 மதிப்பில் சக்கர நாற்காலியும், 02 பயனாளிக்கு ரூ.28,980 மதிப்பில் வாய் பேச இயலாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி திறன்பேசிகளும், 01 பயனாளிக்கு ரூ.3,285 மதிப்பில் காதொலி கருவியும், 01 பயனாளிக்கு ரூ.594 மதிப்பில் எல்போ ஊன்றுகோள் என 10 பயனாளிகளுக்கு ரூ.1,03,889 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் ஊராட்சியில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட அரசு தோழி விடுதிகள் கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை, எஞ்சியுள்ள பணிகளின் விவரம், கட்டுமானப் பொருட்களின் தரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை முனைவர்.ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் பிரேமி (அரியலூர்), மனோகரன் (உடையார்பாளையம்), மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர்..ஜூன் 12, 2026 — ETamilNews நிருபர்.

error: Content is protected !!