Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீஸ் அதிகாரி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை பள்ளிக்கரணை நியூ காலனி முதல் தெருவை சேர்ந்த பாலாஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மனைவி கீதா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை பாலாஜி வேலைக்கும், மகள், மகன் இருவரும் ஓட்டுனர் பயிற்சி வகுப்புக்கும் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கீதா கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.

error: Content is protected !!