தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் 43 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு, முன்னாள் பேராசிரியர் காலில் விழுந்து வணங்கி மரியாதை
தஞ்சாவூரில் பழமையான மன்னர் சரபோஜி அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது, இக்கல்லூரியில் கடந்த 1981-84 ஆம் ஆண்டு விலங்கியல் துறையில் பயின்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இன்று ஒன்று கூடி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர், மேலும் தாங்கள் பாடம் படித்த பேராசிரியை சிசிலியா என்பவரின் காலில் விழுந்து மரியாதை செலுத்தி நினைவு பரிசைக் பெற்றுக் கொண்டனர், இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் பல்வேறு உயர் அலுவலர்களாகவும் உயர் பொறுப்புகளிலும் பதவி வகித்து வந்த நிலையில் 43 வருடங்கள் கழித்து தங்களுடன் பயின்ற மாணவர்களுடன் கலந்துரையாடி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்
