மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் மனைவி காஷ்மிராவின் வங்கி கணக்கில் ரூ.99,99,99,997 வரவு வைக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானிய தொகை தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய வங்கிக்கு சென்ற காஷ்மீரா, இத்தனை கோடி ரூபாய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
