திருச்சியில் கல்லூரி மாணவி தூக்கு போட்டுதற்கொலை
திருச்சி உறையூர் புது பணிக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர்
நிக்சன் இவரது மகள் ஸ்ரீநா வயது 19 இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் இருக்கும் போது அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார் இதைக் கண்டு அவரது பெற்றோர் அவரைக் கண்டித்தனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீநா பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அலாரத்தை துடித்தனர் பின்னர் இது பற்றி அவரது தாயார் லதா உறையூர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் திடீர் மாயம்
திருச்சி லால்குடி ஆங்கரை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும் திருச்சி வி என் நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்தனர் பின்னர் கடந்த 12ஆம் தேதி திருச்சி கே கே நகரில் உள்ள ஒரு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த காப்பகத்தில் இருக்க விரும்பாத அந்த இரண்டு சிறுமிகளும் அங்கிருந்து திடீரென மாயமாக்கினர் இது குறித்து காப்பகத்தின் கண்காணிப்பாளர் அருணா மணி 51 என்பவர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன
ரெண்டு சிறுமிகளையும் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி சிந்தாமணி பஸ் நிலையம் லால்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கழிப்பிடம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை இது குறித்து சிந்தாமணி தேவதானம் கிராம நிர்வாக அதிகாரி கிறிஸ்து பிரியா கோட்டை போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி மத்திய சிறையில் போக்சோ கைதி திடீர் சாவு
திருச்சி திருவரங்கம் வடக்கு கேட் பட்டர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 54)
இவரை ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் வீரமணிக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
சர்க்கரை வியாதி மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவரை ஜெயில் அதிகாரிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து ஜெயில் அதிகாரி வேங்கட சுப்பிரமணி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
