ராகுல் காந்தி பிறந்தநாள்; திருச்சியில் காங்கிரஸ் சார்பில் மருத்துவ மற்றும் ரத்ததான முகாம் – கூட்டணிக் கட்சியினர் திரளாகப் பங்கேற்பு.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, திருச்சி மாவட்ட காங்கிரஸ்

கட்சியின் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சி எம்பி கிறிஸ்டோபர் திலக் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியினர், இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஹபிப் ரகுமான் மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கூத்தன் கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
