Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. எச்சரிக்கை

பொதுமக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “ சட்டப்பேரவை இருக்கிறது என தெரியும். ஏன் உதயநிதி அப்படி பேச வேண்டும். சட்டப்பேரவையில் பங்கேற்க கூடாது என திட்டமிட்டு உதயநிதி இப்படி பேசினாரா என்ற சந்தேகம் எழுகிறது.. பொறுப்பற்ற முறையில் ஏன் பேச வேண்டும்.. எந்த பெண்ணாக இருந்தாலும் தவறு.. தவறு தான்.. இதுபோல குற்றங்களை பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருக்காது. சட்டமன்றத்துக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி அப்படி பேசியிருப்பார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பார்த்து கொண்டிருக்காது. அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து தவறாக பேசக்கூடாது” என்றார்.

error: Content is protected !!