ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15-ல் ரிலீஸாவதால், நேரடிப் போட்டியைத் தவிர்க்கும் பொருட்டு ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை நவம்பர் 27 அல்லது டிசம்பர் 2-க்குத் தள்ளிவைக்கப் படக்குழு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
