இந்தோனேசியாவில் வீட்டில் வளர்க்கப்படும் ராட்சத மலைப்பாம்பின் மீது 3 குழந்தைகள் ஏறி சறுக்கி விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. வீட்டின் பின்புறத்தில் படுத்திருக்கும் அந்தப் பாம்பின் மீது குழந்தைகள் விளையாடுவதை அவர்களின் தந்தையே செல்போனில் படம்பிடித்துப் பதிவிட்டுள்ளார். இக்காட்சி இணையத்தில் பரவி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் எனக் கூறி நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மலைப்பாம்பின் மீது சறுக்கி விளையாடும் குழந்தைகள்
