Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீட் தேர்வு மையங்கள்

நாடு முழுவதும் நாளை நீட் மறு தகுதி தேர்வு (NEET Re-Exam) நடைபெற உள்ள நிலையில், திருச்சியில் உள்ள தேர்வு மையங்கள் அனைத்தும் போலீசாரின் அதிரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, தேர்வு மைய வளாகங்கள் முழுவதும் பலத்த கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

நாடு முழுவதும் ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வில் சில முறைகேடுகள் மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் எழுந்ததாக புகார்கள் கிளம்பின. இதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் மறு தகுதி தேர்வு நடத்த தேசிய தேர்வுகள் முகமை முடிவு செய்தது. இதன்படி, நாடு தழுவிய அளவில் நாளை இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கவும், எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி தேர்வை அமைதியாக நடத்தவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

திருச்சியில் உள்ள முக்கிய தேர்வு மையங்களில் ஒன்றான தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு மையம் தற்போது மாவட்ட காவல் துறையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், கல்லூரி வளாகத்திற்குள் வரும் அனைத்து வகையான வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதித்து வருகின்றனர். மேலும், தேர்வு மையப் பகுதிக்கு தேவையின்றி வரும் வெளி நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றுவட்டாரத்தில் நடமாடுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வாறு வந்தவர்களுக்கு உரிய எச்சரிக்கைகளை வழங்கி போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

error: Content is protected !!