ராசிபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தீபா, தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக வசித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி அவர் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆசிரியை தீபா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், விவாகரத்துப் பெற்ற ஆத்திரத்தில் தீபாவின் முன்னாள் கணவரே அடையாளம் தெரியாதவாறு மாறுவேடத்தில் வந்து, திட்டமிட்டு அவர் மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றது அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
