கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன் மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தாந்தோன்றிமலை அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற

இந்நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
