பெரியபாளையம் அருகே நேற்று ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில் சிக்கி 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாய், மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேரில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சீதா (23) என்ற பெண் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தற்போது உயிரிழந்துள்ள சீதா உட்பட இந்த விபத்தில் பலியான 8 தொழிலாளர்களுமே ஒடிசா (ஒரிசா) மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
