Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரங்கிப்பேட்டை கடலில் 3 மீனவர்கள் மாயம்- மீட்க கோரி குடும்பத்தினர் முற்றுகை

கடலுார்: பரங்கிப்பேட்டை கடலில் மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி, குடும்பத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திக்க வந்த கிள்ளையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி கீதா; எனது கணவர் கல்யாணசுந்தரம், 56; கடலுார் அடுத்த சோனகஞ்சாவடி ஸ்ரீகாந்த், 24; பரங்கிப்பேட்டை பாண்டியன், 56. ஆகியோர் கடந்த 15ம் தேதி அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மறுநாள் வெகுநேரமாகியும் கரை திரும்பவில்லை. இது குறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூர் மீனவர்கள், மீன்பிடி படகுகள், கடலோர காவல் படையின் கப்பல், ஹெலிகாப்டர் உதவியுடன் கடந்த ஒரு வாரமாக தேடுதல் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மாயமான மீனவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இதனால், குடும்பத்தினர் சோகத்தில் உள்ளோம். எனவே, மீட்பு பணியை துரிதப்படுத்தி 3 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரை சந்திக்க வந்துள்ளனர் என்று கூறினார்.

error: Content is protected !!