Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கோட்டையன் திருச்சி விஜயம்…அதிமுக மாஜிக்கள் மட்டும் காரில் ஏன்?…

திருச்சி மற்றும்புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக தமிழக வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்திருந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலந்து கொண்டு

பேசினார். அமைச்சர் செங்கோட்டையன் வருகையின் போது அவரை வரவேற்க அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, மற்றும் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், உள்ளிட்டோர் மட்டுமே வந்திருந்தனர். திருச்சி விழாவில் அவர் கலந்து கொண்ட போதும் சம்மந்தப்பட்ட 3 பேர் மட்டுமே செங்கோட்டையன் காரில் சென்றனர் அவருடன் இருந்தனர். அரசு விழாவில் திருச்சி பொறுப்பு அமைச்சரான ரமேஷ், மணப்பாறை எம்எல்ஏ கதிரவன் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் செங்கோட்டையனை வரவேற்கவோ, அவர் கலந்து கொண்ட விழாவிலோ தவெக திருச்சி நிர்வாகிகள் யாருமே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!