கள எதாா்த்தம் தொியாமல் எழுதிக்கொடுத்த ஸ்கிாிப்டை பேசி முதலமைச்சர் விஜய் இன்றும் நடிகராகவே செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், “கள எதாா்த்தம் தொியாமல் எழுதிக்கொடுத்த ஸ்கிாிப்டை பேசி முதலமைச்சர் விஜய் இன்றும் நடிகராகவே செயல்படுகிறார். குற்றச்செயல்களில் ஈடுபட்ட தவெகவினா் குறித்து முதலமைச்சா் வாய் திறக்கவில்லை. கதை சொல்லியிருக்கிறாா் CM விஜய்: உங்கள் அப்பா என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை என பேசியது நினைவில்லையா? இதுவரை நடந்த ஆட்சி ஊழல் ஆட்சி, நாங்கள் மட்டுமே ஊழலற்ற ஆட்சி செய்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்க CM முயற்சிக்கிறார். என்மீது கூட ஒரு வழக்கு போடுங்கள், நாங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவா்கள் இல்லை. இந்திரா காந்தியை தொியுமா? மிசா உள்ளிட்ட எத்தனையோ கைதுகளை பாா்த்தவா்கள் நாங்கள். சட்டமன்றத்தில் இன்று வசனம் பேசியது போல் பேசுவது என்றும் உதவாது, உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய். நீங்கள் செய்த அனைத்து தவறுகளையும் மறைக்க திமுக மீது களங்கம் உருவாக்க நினைத்தால் அது நடக்காது” என்றார்.
