Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

300 புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று, கடந்த மே 10-ஆம் தேதி முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், சிங்கப்பெண் அதிரடி படை, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், டாஸ்மாக் மூடல் போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 300 புதிய டீசல் மற்றும் சி.என்.ஜி. பேருந்துகளின் சேவையை, இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர், பெரம்பூர் செல்லும் ’29ஏ’ அரசுப் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து, தலைமைச்செயலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை அவரே நேரடியாகப் பயணம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் நின்றிருந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குத் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தபடியும், கையசைத்தபடியும் அவர் பயணம் செய்தது பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!