தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான (2026-2027) கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை தேவையை நிறைவு செய்யும் வகையில் இந்த முக்கிய உத்தரவை தமிழக உயர்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.
மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த தமிழக அரசு, நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை நிரப்பிக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய அரசாணையின்படி, தூய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 20 விழுக்காடு வரை கூடுதல் இடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 விழுக்காடு வரை கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்து மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள உயர்கல்வித் துறை வழிவகை செய்துள்ளது.
