Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏசி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா செக்டர் 119-ல் உள்ள ‘அரண்யா சொசைட்டி’ குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் 22 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில், ஏசி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. வெடித்த சில நிமிடங்களிலேயே அந்த பகுதி முழுவதும் தீ பரவியது.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை என்று போலீசார் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பில் வசித்த அனைவருமே உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கவும், நிர்வாக ரீதியாக முழு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!