Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீஸ் ஸ்டேஷனிலேயே 33 துப்பாக்கி திருட்டு

அரியானா மாநிலம் பரீதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வந்த மோனு (22) என்ற இளைஞர், காவல் நிலைய ஆயுதக் கிடங்கில் இருந்து 33 துப்பாக்கிகளைத் திருடி விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கணினி டிப்ளமோ படிப்பின் ஒரு பகுதியாகப் பயிற்சியாளராகச் சேர்ந்த இவருக்கு, காவல் நிலைய கணினி பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவி பணிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, காவல் நிலைய ஆயுதக் கிடங்கு அறைக்குச் சென்ற மோனு, அங்கிருந்த 33 துப்பாக்கிகளைத் திட்டமிட்டுத் திருடியுள்ளார். கடந்த மாதம் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கமான ஆய்வை மேற்கொண்டபோதுதான் இத்தனை துப்பாக்கிகள் காணாமல் போன அதிர்ச்சி விபரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மோனு துப்பாக்கிகளைத் திருடி அரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில கும்பல்களுக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், விபரீதத்தை உணர்ந்து விரைந்து செயல்பட்டு திருடப்பட்ட துப்பாக்கிகளில் 32 ஆயுதங்களை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

error: Content is protected !!