தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி செய்யக்கோரி பட்டை நாமம், காய்கறிகள் மாலை, மண்வெட்டி ஏந்தி விவசாயிகள் மனு அளிக்கும் போராட்டம்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு, தேர்தல் வாக்குறுதியின் அடுத்த படி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி,

அரியலூரில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கடன் தள்ளுபடி வேண்டி மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்திலிருந்து விவசாயிகள், கைகளில் மண்வெட்டி, காய்கறி மாலை, பட்டை நாமம் அணிந்து விவசாய கடன் தள்ளுபடி வேண்டி கோரிக்கை முழக்கத்தை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், திருமானூர் வேளாண் விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா மாநில அரசு சிறு குறு விவசாயிகள் என எந்த பாகுபாடும் இன்றி அனைத்து

விதமான விவசாய கடன்களையும் ரூபாய் 2 லட்சம் அளவிற்கு தள்ளுபடி செய்துள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி சிறுகுறு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
