பிரதமர் மோடி ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்தில், பாரம்பரிய கலைநயத்துடன் ரூ.480 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தார். அத்துடன், விமான போக்குவரத்தை மேம்படுத்தும் ரூ.28,840 கோடி மதிப்பிலான புதிய ‘உடான்’ திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், பலோத்ராவில் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் ரயில்வே சார்ந்த ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
