திருச்சி பொன்மலை கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்தவர் ஜெகநாதன் (32). அவர் தனது உறவினர் காக்கா நாகராஜ் என்பவருடன் வீடு அருகே பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த பொன்மலை மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த முகமது ஜப்ரான் (வயது 19) ரோகித் ஜான் (வயது 22) மற்றும் சாருக் கான் (வயது 20) மெல்வின் மோகன் (வயது 20) ஆகிய நான்கு பேர் சேர்ந்து ஜெகநாதரிடம் தகராறில் ஈடுபட்டனர். பிறகு முகமது ஜப்ரான் ரோகித் ஜான் ஷாருக்கான் மெல்வின் மோகன் ஆகிய 4 பேர் சேர்ந்து ஜெகநாதன் மற்றும் நாகராஜனை தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாக ஜெகநாதன் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார்
4 பேர் மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர் இவர்களில் ஜெகநாதன் க நாகராஜ் மற்றும் மெல்வின் மோகன் ஆகியோர் மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
