Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி-ரூ.14 லட்சம், 153ATM கார்டுகளுடன் சிக்கிய 3 பேர்

திருச்சி-ரூ.14 லட்சம், 153ATM கார்டுகளுடன் சிக்கிய 3 பேர்

திருச்சி காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் நேற்று
கே.கே.நகர் காவல் எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் தனியார் தங்கும் விடுதியில் ஒரு அறையில் 6 பேர் மர்மமான முறையில் தங்கி இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் பேசியுள்ளனர்.
பின்னர் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 14 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணம், 153 ஏடிஎம் கார்டுகள், 52 விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள், 21 சிம் கார்டுகள் ஒரு பணம் என்னும் எந்திரம், மடிக்கணினி மோடம் கார் 3 இருசக்கர வாகனங்கள் ட்ரில் மெஷின் ஆகியவை சிக்கியது. அதைத் தொடர்ந்து இப்படிப்பட்ட நபர்கள் பங்கு வர்த்தகம் அல்லது ஹவாலா மோசடி கும்பலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது பின்னர் இது பற்றி அந்த தங்கும் விடுதி உரிமையாளர் நஸ்ருதீன் கேகே நகர் போலீசில் புகார் செய்தார்.
அதில் அறையை காலி செய்ய கூறிய போது தன்னை கெட்ட வார்த்தையால் தட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு ஆறு பேர் கும்பலை கைது செய்தனர் விசாரணையில் கைதானவர்கள் ராமநாதபுரம் வண்டிக்கார தெரு, புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி 28 ராமநாதபுரம் உத்திரகோசமங்கை பகுதியைச் சேர்ந்த பழனி முருகன் 29 ராமநாதபுரம் கே கோடிக்குளம் ராஜ்குமார் 22 ராமநாதபுரம் உத்திர கோசமங்கை பிரவீன் 24 அதே பகுதியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் 24 அஜ்மீர் அலி 32 ஆகியோர் என்பது தெரியவந்தது பின்னர் போலீசார் கைதானவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமநாதபுரம் பகத் என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!