இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் வர்த்தக குழுவிற்கும், அதனை எதிர்க்கும் குழுவினருக்கும் இடையே நேற்று (ஜூலை 5) நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இதில் 25 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காயமடைந்த 30 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிறையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான தமிழக மீனவர்களும் உள்ளதால் அவர்களின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது.
