மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை, பா.ம.க. தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி, “நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை சந்தித்தோம். பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் ஜானும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழக நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம். காவிரி – குண்டாறு திட்டம் குறித்து அமைச்சரிடம் ஆலோசித்தோம். அரியலூர் சோழர் பாசன திட்டம் குறித்தும் ஆலோசித்தோம். நீர்மேலாண்மை, நீர்பாசனத் திட்டங்கள் மற்றும் காவிரி குண்டாறு திட்டம் குறித்து எடுத்துரைத்தேன்.. அத்திக்கடவு – அவிநாசி திட்டம் அரைகுறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மேகதாதுவில் அணை
கட்ட ஏதேதோ பொய் சொல்கிறார் கர்நாடகா முதல்வர்.
காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டும். நீர்நிலைகள் மீட்டுருவாக்கம் செய்ய ரூ.2 லட்சம் கோடி தேவைப்படும். ஆண்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கினால் 8 ஆண்டுகளில் நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்யலாம். 60 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மாற்றம். எதிர்க்கட்சிகளைச் சமமாக மதித்து, நேரில் அழைத்து அவர்களின் ஆலோசனைகளையும் யோசனைகளையும் கேட்கிறார்கள். ஆக்கப்பூர்வமான அரசியலை நாங்கள் செய்திருக்கிறோம். இதை மிகப்பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன்” என்றார்.
