அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இன்று எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும், அப்படி சேர்த்தால் கட்சி வலுப்பெறும். தென் மாவட்டத்தில் நம் இலந்த செல்வாக்கை மீட்டெடுக்கலாம் என நிர்வாகிகள் கூறி இருக்கிறார்கள். அதனை கேட்டுக்கொண்ட எடப்பாடி கே. பழனிச்சாமி, அவர் ஒரு மாற்றுக் கட்சி நடத்துகிறாரே அவரை எப்படி நாம் இணைக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவது காலத்தின் தேவை, திமுக உட்பட கட்சியை வீழ்த்த தினகரன் இணைப்பு அவசியம் என்றும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
