Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2000 புதிய மின்சார ஏசி பஸ்..கொள்முதல் செய்ய அரசு முடிவு

தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம் 2,000 புதிய மின்சார ஏ.சி. பேருந்துகளை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக2 ஆயிரம் மின்சார ஏசி பேருந்துகள் வாங்க விரைவில் டெண்டர் விடப்படவுள்ளது. பல்வேறு நவீன வசதிகளுடன் 3 மாதத்திற்குள் 2,000 புதிய பேருந்துகளை வாங்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. வரை இயங்கும் ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என முதவர் விஜய் கூறியதை அடுத்து, அதிநவீனத்திறன் கொண்ட இந்த பேருந்துகளுக்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, நவீன மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்தை நோக்கி எடுக்கப்பட்ட முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

error: Content is protected !!