செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூலை.6) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். திட்டத்தின் தற்போதைய செயல்பாடுகள், உற்பத்தித் திறன் மற்றும் விரிவாக்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவான விளக்கங்களை கேட்டுப்பெற்றுள்ளார். குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
