Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலில் பலத்த காற்று- மீனவர்கள் முடக்கம்….1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

நாகை கடலில் பலத்த காற்று-1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

நாகை: கடலில் பலத்த காற்று வீசி வருவதால் நாகை, புதுகை மீனவர்கள் 4ம் நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.250 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மத்திய அரபி கடலின் பல பகுதிகள், ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டிய பகுதிகள், தெற்கு வங்க கடலை ஒட்டிய மத்திய வங்க கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 கிமீட்டர் முதல் 55 கிமீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக 65 கிமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் கடந்த 3ம் தேதி முதல் நாளை (7ம் தேதி) வரை நாகை, புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகு, பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் கடலில் காற்று பலமாக வீசியதால் நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று மாலை ஏற்றப்பட்டது. 2ம் நாளாக இன்றும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 1,000 விசைப்படகுகளை சேர்ந்த 50 ஆயிரம் மீனவர்கள், 5,000 பைபர் படகுகளை சேர்ந்த 50 ஆயிரம் மீனவர்கள் கடந்த 3ம் தேதி முதல் கடலுக்கு செல்லவில்லை. இன்று 4வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த 500 விசைப்படகு மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நாகையில் தினமும் ரூ.50 கோடி என 4 நாளில் ரூ.200 கோடியும், புதுகையில் 3 நாளில் ரூ.50 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!