கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்திற்கு போடப்பட்ட 5 டெண்டர்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 60 ஆயிரம் டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர், மினி பேருந்துகளுக்கு அடி சட்டம் வாங்க போடப்பட்ட டெண்டர் மற்றும் பேருந்துகள் இருக்கும் இடம் அறிய பயன்படும் ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதற்கு போடப்பட்ட டெண்டர் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்களை தமிழ்நாடு அரசு இன்று ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் விரைவில் தவெக அரசு புதிய டெண்டர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
