Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.. தஞ்சையில் பரிதாபம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிழற்குடையில் கடன் பிரச்சினையால் கூலித் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலச்செம்மங்குடி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமரும் நிழற்குடையில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக இறந்து கிடந்தார். இந்த பேருந்து நிறுத்தம் தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மெலட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு மெலட்டூர் போலீசார் விரைந்து வந்து தூக்கில் இறந்து தொங்கிய ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் அய்யம்பேட்டை திருநகர் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகன் ராஜசேகரன் (55) என்பது தெரிய வந்தது. திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. கூலித் தொழிலாளியான ராஜசேகரன் மதுவுக்கு அடிமையானவர் என்பதும், இதனால் அதிக கடன் வாங்கியுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

கடன் பிரச்சினை அதிகரித்ததால் நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வந்தவர் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலச்செம்மங்குடி பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!