Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜஸ்தானில் லாரி மோதி தந்தை, 3 குழந்தைகள் பரிதாப பலி

ராஜஸ்தானில் லாரி மோதி தந்தை, 3 குழந்தைகள் பரிதாப பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாலையோரத்தில் பலூன் வியாபாரம் செய்து வந்த ஏழைக் குடும்பத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த தந்தை சந்திரபிரகாஷ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்த நிலையில், தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.

நெடுஞ்சாலையோரம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சந்திரபிரகாஷின் குடும்பத்தின் மீது அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர மோதலின் தாக்கத்தால் அங்கிருந்த 3 குழந்தைகள் அருகில் இருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தந்தை சந்திரபிரகாஷ் மற்றும் அவரது மனைவி உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், அங்கு அனுமதிக்கப்பட்ட தந்தை சந்திரபிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தாய் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைத் தேடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!