Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓரிரு வாரத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்

ஓரிரு வாரத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்

முதலமைச்சரின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் – உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி…

சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 126 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்ஷினி நிதி ஒதுக்கீட்டின் கீழ்

கட்டப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சி கூடத்தை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்தார்…

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பெண்களுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று மன அழுத்தம் உள்ளிட்டவைகளிலிருந்து விடுபடுவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தவர்,

ஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள் என்ற கேள்விக்கு,

மக்களுக்கான பல திட்டங்களை செய்யும் மனசாட்சி உள்ள மக்களாட்சி நடைபெற்று வருகிறது எந்த கட்சி என்று பாராமல் நாங்கள் தேவையானவற்றை செய்து வருகிறோம் அதனால் அவர்களுக்கு மக்களே பதில் சொல்வார்கள் என தெரிவித்தார்…

விழாவில் மேயர் கலந்து கொள்ளவில்லை மேயர் உடனான மோதல் போக்கு தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,

எங்களுக்கு எந்த விதமான பாரபட்சமும் இல்லை கட்சி பாராமல் நாங்கள் அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் சிலபேர் சில காரணங்களுக்காக புறக்கணித்து சென்றிருக்கலாம் அதைப் பற்றி கூற முடியாது…

வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,

முதலமைச்சரின் செயல்பாடுகள் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்பதற்காக சிலர் செயல்படுகிறார்கள் திருச்சி செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது தமிழக அரசு பல நல்ல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது மக்களுக்கான சேவையை செய்து வருகிறோம் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் புனையப்பட்ட குறைகளை கூறி வருகிறார்கள் என்றார்

error: Content is protected !!