Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும் என்பதால் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. ஈபிஎஸ்

தொகுதி மறு வரையை திமுக ஆதரித்தது குறித்து கேள்விக்கு தற்போது ஆதரிக்கவில்லை என்றால் எம்பிகளின் எண்ணிக்கை குறையும். ஆகையால் ஆதாரீத்துள்ளார்கள் கரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 6 மாத கால ஆட்சியில் தவெக அரசு எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை வாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயர்நீதிமன்றம் உத்தரவின் பெயரில் கள்ளகுறிச்சி எம்.எல்.ஏ பிரச்சினைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டார்கள், அதற்கு 4 மாதம் தண்ணீர் தேவை, 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு அணையை மூடி விட்டார்கள். இதனை நம்பி விவசாயிகள் பயிர்களை நட்டு விட்டார்கள். இப்போது தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டத்தில் பயிர்கள் காய்ந்து போய் விட்டன. 33% பயிர் சேதமடைந்து இருந்தால் களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும், நேற்று இதற்காக ஆய்வு கூட்டம் ஒன்றை முதல்வர் தலைமையில் நடத்தி இருக்கிறார்கள், ஆனால், முடிவு என்ன என்று சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் கொடுக்க வேண்டும். தேசிய பயிர் நிவாரண நிதி, மாநில அரசு பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வறட்சியின் போது பயிர் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது அதிமுக அரசு. தவெக கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பது போல், சிறு குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என பாகுபாடு பார்த்து கடன் தள்ளுபடி செய்யாமல், யாரிடமும் ஆலோசனை செய்யாமல் தாந்தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறார்கள். அனைவருக்கும். தொகுதி மறுவரையரை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாற்றுவேன் என்றார்கள், தமிழகத்தில் எந்த பாதிப்பும் வராது, எண்ணிக்கை குறையாது என உள்துறை அமைச்சர் ஏற்கனவே சொல்லி இருந்தார். தமிழகத்தில் 59 தொகுதி வரும் போது 7.12 சதவீதம் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்கிறது. தொகுதி மறுவரையரை குறித்த கோரிக்கைகள் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதால் திமுக ஏற்றுக் கொண்டது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வந்தால் தொகுதி மறுவரை சட்டமன்ற தொகுதி எண்ணிக்கையும் மாறுபடும். டிசம்பருக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதால் தான் இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தற்போது கொண்டுவரப்படும் இந்த தொகுதிமறுவரையரை 25 ஆண்டுக்கு இது தொடரும். அரசியல் கட்சிகளின் பலம் அதிகரிக்கும் என்பதால் தான் பல கட்சிகள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதனால் எந்த மாநிலத்திற்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், திமுக தலைவரை பார்ர்கிறார்கள் என்று தெரியாது. இடைத் தேர்தலில் நாங்கள் போட்டி யிட்ட மீண்டும் அதே இடங்களில் போட்டியிடுவோம். ஜனநாயகத்தின்படி இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

error: Content is protected !!
Secret Link