அதிமுக புத்துணர்ச்சியோடு வெகுண்டெழுந்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் என EPS தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்று திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்த அவர், நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை ஈட்டித் தர வேண்டும். கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களின் பழைய கதைகளை பற்றி பேச வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
