பஹாமாஸின் நார்த் ஆண்ட்ரோஸ் அருகே பிளமிங்கோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா 402 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த இந்த சோகமான விபத்தை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பிளமிங்கோ ஏர் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
