Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு வாரம் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு-தீர்மானம்

கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாதை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தஞ்சாவூரில் அந்த கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்து

கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சமாக கறி கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி, நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும். கறி கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை, கோழி உற்பத்தியாளர்கள் கடை பிடிக்க வேண்டும். இதனால் கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதால், அந்த கோழிகள் எடை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கோழிகளில் உடலில்

தீவனங்கள் தங்கி ஜூரனம் ஆவதில்லை. இதனால் அதன் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது கோரிக்கையை

ஏற்காததை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், இனி வங்காலங்களில் மகாவீர்ஜெயந்தி, வள்ளலார் தினம் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் கறி கோழி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!