வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை
திருச்சியில்
பெண் உள்பட இரண்டு பேர் கைது
திருச்சி
பஞ்சப்பூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் மில் காலனியை சேர்ந்த மதன் மித்திரன் (வயது 40) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மதன்மித்ரனைபிடித்து கைது செய்து அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று ராம்ஜிநகர் மில்க் காலனி பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்பவரின் மனைவி மல்லிகா (வயது 65) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரை மதுவிலக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 1.790கி
கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 90 ஆயிரம் ஆகும்.
திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி மணிகண்டம் விஜிபி காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயராமன் வயது 30 இவர் திருச்சி ஹீப ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயராமனை கைது செய்து அவரிடமிருந்துபுகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று திருவானைக்காவல் பர்மா காலனி அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த லால்குடி அருகே உள்ள தைலகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 68) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 120 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட விஜயராமன் மற்றும் கணேசனை போலீசார் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
