மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது விபரீதம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 27) இவர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகிலுள்ள காற்றாலை தொழிற்சாலையில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.மேலும் இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர் எஸ் நகர் அருகில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி இரவு அவர் குடிபோதையில் தனது மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆபத்தான நிலையில் ராகுல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகுல் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
