Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – மின்வாரிய ஊழியர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - மின்வாரிய ஊழியர் போராட்டம்

தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் மத்திய அமைப்பு சார்பில் சிஐடியு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமையில்
திருச்சி தென்னூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு இயக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மின்சார வாரியத்தில் ஒப்பந்த முறையை ரத்த செய்ய வேண்டும், மின் நுகர்வோரின் அடிப்படை பணிகளான மின்தடை நீக்குதல், கம்பம் நடுதல், கம்பி இழுத்தல், பிரேக் டவுன் பணிகளில் பல ஆண்டு காலம் களப்பணியில் அனுபவம் பெற்றுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும், 23,000 காலியாக உள்ள களஉதவியாளர், கம்பியாளர் பணியிடங்களில் உடனடியாக பணி செய்ய முடிந்த சில ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தி தடையில்லா மின்சாரம் வழங்கி மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் தமிழ்நாடு மின் பகிர்மான கழக திருச்சி மண்டல தலைமை பொறியாளர் கீதா அவர்களிடம் மனுவை அளித்தனர்.

போராட்டத்தில் நிர்வாகிகள் பழனியாண்டி, நடராஜன், திருமலைசாமி, இளங்கோவன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!