கரூரில் பள்ளி பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தில் இருவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
கரூர் புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது வையாபுரி நகர் முதல் கிராஸ் பகுதியில், முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்துள்ளார்.
அப்போது, பின்னால் வந்த பள்ளி பேருந்து ஓட்டுனர் ஜம்புகேஸ்வரன் என்பவர், முன்னால் சென்ற இரு இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதியது.
இந்த விபத்தில், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதே விபத்தில், கரூர் திருக்காம்புலியூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமார் என்பவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
