Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணின் தாயார் அரிவாளால் வெட்டிக் கொலை.

யுவராஜ் (32) என்பவருக்கும் அவரது உறவினர் வர்ஷாவுக்கும் (21) நிச்சயம் ஆன நிலையில், திருமணத்திற்கு பெண் மறுத்ததால் அவரை வீடு புகுந்து வெட்டியபோது, தடுக்கச் சென்ற பெண்ணின் தாயார் விநாயகஜோதியையும் (45) வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த வர்ஷாவுக்கு தீவிர சிகிச்சை. யுவராஜ் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் யுவராஜா, வர்ஷா வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.அப்போது தடுக்க முயன்ற வர்ஷாவின் தாய் விநாயக ஜோதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தாக்குதலில் வர்ஷாவும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு யுவராஜா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

error: Content is protected !!