2027ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக, சுயவிவரக் கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக வீட்டுப்பட்டியல் பதிவுகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும்.
