திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து
இன்ஸ்பெக்டர்பாசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டு இருந்த இபி ரோடு பகுதியை சேர்ந்த கணேஷ் பாண்டியன் (21). மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்தி (25) ஆகிய2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் லேப்டாப், இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்து 550 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பொதுக் கழிவறை அருகில் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்த நஸ்ருதீன் ( 26) திருவெறும்பூர் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் ( 28) அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சவகர் சாதிக் ( 28) கோட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் (20) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
