அதிமுகவை அழித்துவிடலாம் என்று விஜய் நினைத்தால் அது நடக்காது” என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் எனக் குறிப்பிட்ட அவர், தலைவன் ஓடினாலும் தொண்டன் அங்கேயேதான் இருப்பான் என்றும், யாரை ஒழிக்க வேண்டும் என்று தொண்டனுக்குத் தெரியும் என்றும் கூறினார். திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என அவர் சாடியுள்ளார்
