அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்..
துர்நாற்றத்துடன், அழுகிய நிலையில் கிடந்த இறந்தவரின் உடலை வயல்வெளிகளில் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து நடந்து வந்த அய்யம்பேட்டை போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே நெடுந்தெரு பகுதியில்

முருகானந்தம் என்பவர் விவசாயம் செய்யும் வயல்கள் அமைந்துள்ளன..
வழக்கம் போல அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விவசாய பணியில் ஈடுபடுவதற்காக வயல்வெளிகளுக்கு வந்துள்ளனர்..
அப்போது அந்த வயலில் துர்நாற்றத்துடன் கூடிய அழுகிய நிலையில் சுமார் 65-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
உடனடியாக அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார், பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உயிரிழந்தவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து வயலில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
மேலும் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் காணப்பட்ட பிரேதத்தை தோளில் சுமந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வயல்வெளிகளில் நடந்து வந்த அய்யம்பேட்டை போலீசாரின் செயல் பொதுமக்களிடயே பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது..
