மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
திருச்சி லால்குடி கீழரசூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்
ராஜேந்திரன் (வயது 60) விவசாயக் கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு உள்ள தென்னை மரத்தில் ஏறி காய்ந்த மட்டைகளை அகற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் ராஜேந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாப்பாத்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை அருகே வாலிபர் மயங்கி விழுந்த சாவு
திருச்சி மணப்பாறை நேருஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை (24) இவர் வீட்டில் இருந்தபோது திடீரென வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் மீண்டும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பாண்டித்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
