Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

நடிகர் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரலாறு மிகப்பெரிய விழாவாக நடத்தபடும்.

அமைச்சர் ராஜ்மோகன் பேட்டியில் கூறியதாவுது.. நடிகர் சிவாஜிகணேசன் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி நினைவு மண்டபத்தில்

அமைச்சர் ராஜ்மோகன், பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

*பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு *

25 ஆம் ஆண்டு நினைவு நாளில் வந்தவர்களுக்கு நன்றி.

என் வேண்டுகோளுக்காக இங்கு வந்திருக்கிறார் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2028ம் ஆண்டு சிவாஜி கணேசன் நூற்றாண்டு வருகிறது.முதலமைச்சர் விஜய் முன் நின்று நடத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.

அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  • அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி*

எங்கள் கொள்கை தலைவர் காமராஜரின் பக்தர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்நாள் நண்பர்.

கலைத்துறையின் பிதாமகன் சிவாஜி கணேசன்.

பாரதியார், வ.உ.சி, கர்ணன் போன்றோரை பார்த்ததில்லை சிவாஜி ஐயாவால் பார்த்திருக்கிறோம்.

கர்ணன் யார் என்று நாங்கள் நேரில் பார்த்தது இல்லை. அதனை கண்ணெதிரே காட்டியவர் சிவாஜி கணேசன்.

சிவாஜி அவர்களின் நூற்றாண்டு, பொன்னெழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

வரலாறு சினிமா பெருமை கொள்வது போல் சரித்திரம் வியக்கும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மிகப்பெரிய விழாவாக நடத்தபடும்.

இது பெருமையல்ல. இது எங்கள் கடமை என தெரிவித்தார்.

error: Content is protected !!